நடிகர் தர்ஷன் மீதான வழக்கு ரத்து! நீதிபதி மகன் தரப்பில் சமாதானம்! - Seithipunal
Seithipunal


நீதிபதி மகனுடன் ஏற்பட்ட தகராறுக்கு காரணமான வழக்கில், நடிகர் தர்ஷனுக்கு எதிரான புகாரை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சில நாட்களுக்கு முன், தர்ஷனின் வீட்டின் முன்பு உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் தனது காரை நிறுத்தியிருந்தார். குடும்பத்துடன் அருகிலுள்ள டீக்கடையில் அமர்ந்திருந்த அவரிடம், காற்றுப்பதிந்த நேரத்துக்குப் பின் காரை அகற்றுமாறு தர்ஷன் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி, கைகலப்பாக மாறியது. இதில் நீதிபதி மகன் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தொடர்ந்து, நீதிபதி மகன் அளித்த புகாரின் பேரில், தர்ஷன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கமைய அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதேசமயம், தர்ஷனும் தனக்கு நேர்ந்த தாக்குதல் குறித்து புகார் அளித்ததையடுத்து, நீதிபதி மகன் தரப்பினர்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர், இருபக்கமும் சமரசம் செய்யப்பட்டதால், இருவருக்கும் எதிராக பதியப்பட்ட வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor dharshan case dismissed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->