2 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை பயணம் செல்லும் நடிகர் ரஜினிகாந்த்! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த், ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒரு வார பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு செல்லவுள்ளார்.

தற்பொழுது ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் இருந்து சமீப காலத்தில் வெளியான 3 பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

இந்த படத்தின் ட்ரைலரும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது. 2019 ஆம் ஆண்டு வரை ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படத்தின் படபிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு செல்வது வழக்கமாகக் கொண்டு இருந்தார். 

சில ஆண்டுகளாக உடல்நிலை குறைவு காரணமாக அவர் இமயமலை செல்வதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'காலா' மற்றும் '2.௦' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்று வந்ததற்கு பிறகு கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லவில்லை. 

இதனால் மீண்டும் அடுத்த மாதம் இமயமலைக்கு ரஜினிகாந்த் செல்ல இருக்கிறார். அதன்படி ரஜினிகாந்த் ஆகஸ்ட் 6 ஆம் தேதி இமயமலைக்குச் சென்று அங்குள்ள பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை போன்ற புனித தங்களுக்கு அவர் செல்ல உள்ளார். 

சில நேரங்களில் ரஜினிகாந்த் இமயமலை செல்லும் போது அவரது மகள்களில் ஒருவர் உடன் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை ரஜினிகாந்த் மட்டும் தனியாக செல்கிறார். 

'ஜெயிலர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர் இமயமலையில் இருப்பார் என்று ரஜினிகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Rajinikanth travel to Himalayas


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->