'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய சரத்குமார்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரித்துள்ளார் இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் வாரிசு திரைப்படம் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வாரிசு படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள 'ரஞ்சிதமே ரஞ்சிதமே'  பாடலுக்கு ரீல்ஸ் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், வாரிசு திரைப்படத்தில் நடித்த நடிகர் சரத்குமார் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி இருக்கின்றார். இது குறித்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor sarath Kumar reels ranjithame song


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->