பிரபல தமிழ் வில்லன் நடிகருக்கு பெற்ற மகனால் வந்த கடும் வேதனை!
actor suryakanth now struggled
கடந்த சில மாதங்களுக்கு முன் இளம் பெண்ணை ரூமில் அடைத்து பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் நடிகர் சூர்யகாந்த் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பின் நடிகர் சூர்யகாந்த் தற்போது வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார்.

தூறல் நின்னுபோச்சு தொடங்கி 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் சூர்யகாந்த், கிழக்கு சீமையிலே படத்தில் தனது மகனை ஊதாரியாகவும், சமூகத்துக்கு தீங்கானவனாகவும் வளர்க்க கூடிய ஒரு கொடூர தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
பின்னர் பட வாய்ப்பு குறையவே, தமிழக அரசியலிலும் வளம் வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், அவரது மகன் விஜய் ஹாரீஷ் இளம் பெண் ஒருவரை வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டார். பின் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு, மகன் சிறை என்று செலவுக்கு கூட பணமின்றி வீட்டுக்குள் முடங்கி உள்ளார் நடிகர் சூர்ய காந்த். மேலும் அவருக்கு சர்க்கரை நோய் வேறு இருப்பதால் கடுமையான வறுமையில் சிக்கியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு திரை உலக பிரபலங்கள் அரசியல் கட்சி அமைப்புகள் தனக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
actor suryakanth now struggled