நாக் அஸ்வினின் நகைச்சுவை பதில்...!!! 'கல்கி 2898 AD 2' பாகம் எப்போது? என்ற கேள்விக்கு...!!
Nag Ashwins humorous answer question when Kalki 2898 AD 2 part
இயக்குனர் நாக் அஸ்வின், 'கல்கி 2898 ஏடி' படத்தின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து, அதன் 2-ம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு இதுவரை 60 % முடிந்துள்ளநிலையில், மீதி படப்பிடிப்பு காட்சிகள் துவங்க தாமதமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் நாக் அஸ்வினிடம் 'கல்கி 2' எப்போது? என நிபுணர்கள் கேள்வி கேட்கப்பட்டது.
நாக் அஸ்வின்:
அதற்கு அவர் தெரிவித்ததாவது, "கடந்த முறை, 3-4 கிரகங்கள் இணையும்போது 'கல்கி 2898 ஏடி' வெளியாகும் என்று நான் சொன்னேன். இப்போது, 7-8 கிரகங்கள் இணையும்போது அதன் 2-ம் பாகம் வெளியாகும்" எனத் தெரிவித்தார்.
அவரது நகைச்சுவையான பதில் அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்து சிரிக்க வைத்தது. இதற்கிடையே, இயக்குனர் 'நாக் அஸ்வின்' பாலிவுட் நடிகை 'ஆலியா பட்'டுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
English Summary
Nag Ashwins humorous answer question when Kalki 2898 AD 2 part