அட்லீ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட 'tourist family' படத்தின் ட்ரெய்லர்...! - Seithipunal
Seithipunal


நடிகரும்,இயக்குனருமான 'சசிகுமார்' நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'நந்தன்' திரைப்படம் மக்களிடையே மிகுந்த நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக 'tourist family' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கஇத்திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகியுள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பசலியான், நசரேத் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

மேலும், படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, 2-ஆவது சிங்கிள் கடந்த 16ஆம் தேதி வெளியானது.

இயக்குனர் 'அட்லி':

இந்நிலையில்  'tourist family' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை இயக்குனர் 'அட்லி' அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.டிரெய்லரில், இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து தமிழ்நாட்டில் காவலர்களிடம் இருந்து தப்பிக்க போராடும் குடும்பத்தின் கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தை வேடிக்கையான மற்றும் உணர்ச்சிபூர்வமான கதையாக உருவாகியுள்ளதாக தெரிகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Atlee released trailer film 'tourist family' X page


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->