இந்த கண்டிஷன் போட்ட ஒரே படம் "மாமன்னன்" தான்.. நடிகர் வடிவேலு ஓபன் டாக்.!!
Actor vadivelu shared about Maamannan shooting
மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான மாமன்னன் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வடிவேலு பேசியதாவது "எத்தனையோ படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளேன். காமெடி நடிகனாக இவ்வளவு நாட்கள் நடித்து வந்தேன். ஆனால் மாமன்னன் படம் முற்றிலும் மாறுபட்டது.
நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி ஆகிய படங்களில் ஒப்பந்தமான சமயத்தில் இப்படி ஒரு படம் பண்ணலாம் என உதயநிதி என்னிடம் கேட்டார். மாரி செல்வராஜின் படங்களை பார்த்து இருக்கிறீர்களா? என கேட்டார். அன்று இரவே நான் மாரி செல்வராஜின் இரண்டு படங்களையும் பார்த்து விட்டேன்.
மறுநாள் அவர் மாமன்னன் படம் பற்றி ஒற்றை வரி சொல்லும் பொழுது நன்றாக இருந்தது. மாமன்னன் கதையில் நடிப்புக்கு நிறைய வாய்ப்பு இருந்தது ஆனால் நகைச்சுவைக்கு வாய்ப்பில்லை.
ஆனால் ஒவ்வொரு காட்சியும் கொஞ்சம் மாறினாலும் காமெடி ஆகிவிடும். என்னை சிரிக்க கூடாது என கண்டிஷன் போட்ட ஒரே படம் மாமன்னன் மட்டும் தான். காமெடி வடிவேலுவுக்கும் சீரியஸ் வடிவேலுக்கும் இடையே ஒரு போராட்டமே நடந்தது. ஒரே மீட்டரில் நடித்துக் கொடுத்தேன். படத்தைப் பார்த்துவிட்டு முதல்வர் பாராட்டினார், ரஜினி பாராட்டினார், கமல் பாராட்டினார் இந்த படத்தில் நான் மட்டும் ஹீரோ என்பது தவறானது. இந்த படத்தில் எல்லாருமே ஹீரோ தான்" என அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
English Summary
Actor vadivelu shared about Maamannan shooting