போக்குவரத்து விதியை மீறிய விஜய்க்கு நேற்று அபராதம்.. இன்று அபராத தொகையை செலுத்திய விஜய்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் சினிமாவையும் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியிருந்தார். இதனையடுத்து நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட போவதாகவும் சினிமாவில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் இதற்கு விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று விஜய் மக்கள் நிர்வாகிகளை சந்திப்பதற்காக தனது வீட்டில் இருந்து பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் விஜய்யின் காரை பின் தொடர்ந்து பின்னாடி வந்துள்ளனர். இதனையடுத்து நடிகர் விஜய்யின் கார் சிக்னலில் நிற்காமல் தொடர்ந்து சென்றது இதனால் போக்குவரத்து விதியை மீறியதாக போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்தினார் நடிகர் விஜய் செலுத்தியுள்ளார். 500 ரூபாய் அபராத தொகையை ஆன்லைன் மூலம் அபராதத்தை செலுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay paid traffic rulefine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->