300 நாளாச்சு... படத்தோட அப்டேட் என்னாச்சு? அஜித் ரசிகர்கள் கேள்வி! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகில் பிரபல நடிகர்களின் பிறந்தநாள் மற்றும் படத்தின் ஆண்டு விழா நாட்களில் வெற்றி படங்களை மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. 

இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர்களால் திரையரங்குகளில் உரிமையாளர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 

அந்த வகையில் கடந்த சில வாரங்களில் வாரணம் ஆயிரம், ஆயிரத்தில் ஒருவன், மின்னலே, காதலுக்கு மரியாதை, அண்ணாமலை, திருமலை போன்ற படங்கள் வெளியானது. 

இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு ''வாலி'' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். 

இந்த திரைப்படம் கடந்த 23ஆம் தேதி புதுச்சேரியில் வெளியானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அஜித் ரசிகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு மீண்டும் ரிலீஸான படத்திற்காக அஜித்தின் பேனருக்கு மாலை போட்டு பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 

இதற்கிடையே திரையரங்கு முன்பு திடீரென ஒரு பேனரை பிடித்து அதில் லைகாவை காணவில்லை. விடா முயற்சி டைட்டில் வெளியாகி 300 நாளாச்சு. படத்தோட அப்டேட் என்ன ஆச்சு?கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் திரையரங்கு முன்பு நடனமாடி படத்தை வரவேற்று கொண்டாடினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith fans movie update question


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->