நடிகர் அஜித்தின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தல அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில் கடந்த சில மாதங்களாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வீடியோ மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், நேற்று இந்த படத்தின் இரண்டாவது பாடலான மதர் சாங் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து தற்போது நடிகர் அஜித் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith mother photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->