பிக் பாஸ் ஏழாவது சீசனின் டைட்டில் வின்னர் கைது - நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal


தமிழைப் போலவே, தெலுங்கிலும் பிக் பாஸ் ஏழாவது சீசன் நடைபெற்றது. இந்த சீசனின் வெற்றியாளராக விவசாயம் குறித்த தகவல்களை கூறி யூடியூப் மூலம் பிரபலமான பல்லவி பிரஷாந்த் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தை, பிரபல சீரியல் நடிகரான அமர்தீப் பெற்றார்.

இந்த நிலையில், கடந்த 18ம் தேதி அமர்தீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி கார் மூலம் வீட்டுக்கு சென்றபோது, பிரஷாந்தின் ரசிகர்கள் சிலர், அவரது காரை தாக்கி உடைத்தது மட்டும் இன்றி, காரை துரத்திக்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த செயலுக்கு நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் பலர் ரசிகர்களின் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். அமர்தீப் கார் உடைக்கப்பட்டது மட்டுமின்றி அரசு பேருந்துகளின் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. பிரஷாந்த் ரசிகர்கள் செய்த இந்தச்  செயலால் தெலங்கானா காவல்துறை பிரஷாந்தை கைது செய்துள்ளனர். 

அமைதியைக் கெடுக்கும் வகையில் நடந்துகொண்டதால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள போலீஸார், அவர் மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளது. இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியிலும் தெலுங்கு திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bigg boss season 7 tittle winner pallavi prashanth arrest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->