ஜாதி படம் தான் தேவை... பா. ரஞ்சித், மாரி செல்வராஜை இழுக்காதீர்கள்... ஆதங்கப்பட்ட 'மெட்டி ஒலி' புகழ் போஸ் வெங்கட் .!
Bose venkat exhales speach about Indian caste genre films
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனருமான போஸ் வெங்கட் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் தமிழ் சினிமாவில் தற்காலத்தில் வெளியாகும் படங்களைப் பற்றிய சினிமாவிற்குள் இருக்கும் ஜாதிய முறைகளையும் பற்றி பேசியுள்ளார்.
மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் சினிமாவில் சில படங்கள் நன்றாக ஓடுவதாக என்னை பார்க்க அழைக்கிறார்கள். ஆனால் அந்தப் படங்களில் கதையோ, திரைக்கதையோ அல்லது கதாபாத்திரமும் முழுமையாக இல்லை. ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்றவர்கள் யாரும் அதோடு ஒன்றிப்போவதில்லை. இது போன்ற படங்களை எனக்கு பரிந்துரைக்கிறார்கள் என வருத்தத்துடன் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் தமிழ் சினிமாவிற்கு கன்னி மாடம் மற்றும் கர்ணன் போன்ற ஜாதிய படங்கள் தேவை என்று தெரிவித்தார். தந்தை பெரியார் சொன்னது போல கீழிருப்பவர்களுக்காக போராட வேண்டும் என தெரிவித்தார் சாதியைச் சார்ந்த மனிதர்களின் பண்புகளை காட்டுவதில் இங்கு பிரச்சனை இல்லை ஆனால் ஒரு ஜாதியை தாழ்த்தி இன்னொரு ஜாதியை உயர்த்தி பிடிப்பதில் தான் இங்கு பிரச்சனை இருக்கிறது எனக்கு கூறினார் போஸ் வெங்கட்.
பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், முத்தையா போன்றவர்களை பின்னோக்கி இழுக்காதீர்கள் அவர்கள் ஜாதியை இயக்குனர்கள் அல்ல. தமிழ் சினிமாவிற்கு தரமான படைப்புகளை தரக்கூடியவர்கள். தயவுசெய்து அவர்களை ஜாதி என்னும் வட்டத்திற்குள் பொறுக்காதீர்கள். பா. ரஞ்சித்தை ஜாதியை தீர்க்கும் தள்ளி விட்டாள் அவரிடமிருந்து சார்பட்டா மற்றும் மெட்ராஸ் போன்ற படைப்புகளை பெற்றிருக்க முடியாது.
English Summary
Bose venkat exhales speach about Indian caste genre films