விஜயகாந்த் சாரை வில்லனாக வைத்து கதை எழுதியிருக்கிறேன் - மேடையில் பகிர்ந்த பா.விஜய்.! - Seithipunal
Seithipunal


இருபத்து இரண்டாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் படம் திரையிடப்பட்டது. அப்போது இயக்குனர் பா.ரஞ்சித், மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து பேசினார். அதாவது:-

'எனக்கு ஒரு விஷயம் நினைவு இருக்கிறது. அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்தேன். பள்ளியில் நடந்த விழா ஒன்றில் ஒரு நாடகத்தில் கலந்துகொண்டிருந்தேன். ஆனால், என்னால் வசனத்தை சரியாக சொல்ல முடியவில்லை. 

இதனால், என்னை 'ஆட்டமா தேரோட்டமா' என்ற பாடலுக்கு நடனமாட வைத்தார்கள். நான் நன்றாக நடனமாடியதால், " ஒன்ஸ் மோர்" என்றனர். பின்னர் நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது கதை எழுத ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் விஜயகாந்த் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை வில்லனாகக் கற்பனை செய்து கூட கதைகள் எழுதியிருக்கிறேன்' என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director b ranjith speech about actor vijayakanth


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->