ஏன் இப்படிலாம் படம் எடுக்கிறிங்க? சீறிய இயக்குநர் தங்கர் பச்சான்!
Director Thankar Bachan Say About Masala and Community issue movies
மசாலா படங்கள் குறித்தும், சாதிய மோதல்களை உண்டாக்கும் வகையில் எடுக்கப்படக்கூடிய திரைப்படங்கள் குறித்தும், இயக்குநர் தங்கர்பச்சான் காட்டமாக விமர்சித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் சேரன் நடித்துள்ள 'தமிழ்க் குடிமகன்' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகள் இயக்குனர்கள் அமீர், மாரி செல்வராஜ், தங்கர் பச்சான், சேரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்ச்சியில் இயக்குனர் தங்கர்பச்சான் பேசுகையில், "நான் 14 வயதிலிருந்து என்னோட கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து விட்டேன்.
அப்போது எனது கிராமத்தில் பார்த்த சாதிய பாகுபாடுகள், இப்போதும் இல்லை என்று என்னால் சொல்ல முடியாது. இதே நிலைமைதான் தமிழ்நாடு முழுக்க இருந்து வருகிறது.
அரசியல் ரீதியாக அதிகாரத்தை பெற விரும்புபவர்கள், சாதியை வைத்து தான் அந்த அதிகாரத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
சாதிய பாகுபாடுகள் ஏன் இன்னும் இப்படி உயிர்ப்போடு இருக்கிறது? இதற்கு முக்கிய காரணம், இதற்கு உயிர் கொடுப்பவர்கள், இந்த சாதியை வைத்து அரசியல் அதிகாரத்தை பெறுகிறவர்கள் தான்.
ஒரு திரைப்படம் பிரிவினையை உண்டு பண்ண கூடாது. சமூகங்களை இணைக்கும் பணியைத் தான் திரைப்படங்கள் செய்ய வேண்டும்.
எப்படி சமூகங்களை இணைப்பது என்றால்...? வெறும் ஒரு சமூகத்தின் வலியை சொல்லுவதை தாண்டி, அந்த சமூகங்களை இணைப்பது போன்ற காட்சியை அமைக்க வேண்டும்.
அப்படியான ஒரு படம் அண்மை காலமாக வரவில்லை. அப்படியான படங்கள் தான் இனிமேல் வரவேண்டும்.
சாதிய அடுக்குகள் பற்றி நான் கிராமத்தில் இருக்கும் வரை எனக்கு பெரிதாக தெரியவில்லை. தற்போது நாங்குநேரி சம்பவத்தைக் கேட்கும் போதே எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை.
சாதி பாகுபாடு, பிரிவினை, அடக்குமுறை, பெருமை இதெல்லாம் நம் மக்கிளடையே குறைந்து வருவது போல திரைப்படங்களை நாம் எடுத்து வெளியிட வேண்டும்.
இந்தத் திரைக்கலை மூலமாக மக்களுக்கு ஏதாவது செய்த விட முடியுமா? என்று நானும், சேரனும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அந்த கதை எவ்வளவு மோசமாக இருந்தாலும், அது எப்படி இருக்கிறது என்று பார்க்க ரசிகர்கள் போய்விடுகிறார்கள்.
அந்த நடிகர்களின் முகத்திற்காக படம் பார்க்கப் போகிறார்கள். இப்படியான மசாலா படங்களில் என்னதான் இருக்கிறது? வெறும் மூன்று மணி நேரம் போதை மட்டும் தான்.
நாம் வாக்களிக்கும் போது, எப்படி ஒரு சின்னத்தை பார்த்து வாக்களிக்கிறோமோ... அதே போன்று தான் ஒரு நடிகரின் முகத்துக்காக போய் சினிமா பார்ப்பதும். மக்கள் நினைத்தால் மட்டுமே இந்த நிலை மாறும்'' என்று தங்கள் பச்சான் பேசினார்.
English Summary
Director Thankar Bachan Say About Masala and Community issue movies