டிராகன் ஹீரோயின் கயாடு லோகர் அடித்த ஜாக்பாட்!சிம்புவின் STR 49 படத்தில் வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


‘டிராகன்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான கயாடு லோகர், அடுத்ததாக சிம்புவின் STR 49 படத்தில் நாயகியாக தேர்வாகியுள்ளார்.

தென் இந்திய திரையுலகில், வெளி மாநில நடிகைகள் அதிகளவில் முக்கிய இடத்தை பிடித்து வரும் நிலையில், கயாடு லோகர் தற்போது முன்னணி நடிகையாக மாறி வருகிறார். ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது, அவர் அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு, STR 49 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முன்னதாக, சாய் பல்லவியிடம் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியது. ஆனால், அவர் இந்த படத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, கயாடு லோகர் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

STR 49 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் முதல்பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dragon heroine Kayadu Logar hits the jackpot Opportunity in Simbu STR 49 film


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->