நெகிழ்ச்சி!!!நடிகர் பிரித்விராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினி சந்தித்ததை பற்றி...! - Seithipunal
Seithipunal


மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் தமிழிலும் சில படங்கள் நடித்து 'ஹிட்' கொடுத்துள்ளார். கடந்த 2019 -ல் மோகன்லால் நடித்து வெளிவந்த 'லூசிபர்' படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகினார்.

இப்படம் அவருக்கு நல்ல பேரை வாங்கி தந்தது. அதன்பின் பிரித்திவிராஜ், மோகன்லாலை வைத்து 'ப்ரோ டாடி' படத்தையும் இயக்கினார். மீண்டும் இவர் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க லூசிபர் படத்தின் 2 வது பாகமான 'எல் 2 எம்புரான்' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இப்படம் வரும் மார்ச் 27ஆம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் தற்போது படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பிரித்விராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:

இந்நிலையில் படத்தின் இயக்குனரான பிரித்விராஜ் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து," எல்2 இம்பிரான் படத்தின் டிரைலரை முதன் முதலில் பார்த்த நபர் நீங்கள் தான் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) .

அதைப்பார்த்த பிறகு நீங்கள் சொன்னதை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன். இந்த உலகம் எனக்கானது இது என குறிக்கிறது. என்றென்றும் உங்கள் ரசிகன். ஒஜி சூப்பர் ஸ்டார் " என்று தனது  எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Resilience Actor Prithviraj about meeting superstar Rajini


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->