துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!
Dulkar Salman new movie first look reasesed
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'ஓ காதல் கண்மணி' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இதற்குமுன் தமிழில் நடித்த திரைப்படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தருகின்றன. தமிழில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் புதிய படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் காஜல்அகர்வால், அதிதி ராவ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
English Summary
Dulkar Salman new movie first look reasesed