அரசு திட்டத்தில் மோசடி..கொந்தளித்த  நடிகை சன்னி லியோன்! - Seithipunal
Seithipunal


தனது  அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தி மோசடி நடந்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் .  இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என்று   நடிகை சன்னி லியோன்கூறியுள்ளார். 

ஆபாச நடிகையாக ஒரு காலத்தில் அந்த மாதிரியான பிட்டு படங்களில் நடித்து உலகளவில் ஃபேமஸ் ஆனவர் தான் சன்னி லியோன் .இந்தி படங்களில் கவர்ச்சி நடிகையாக நடிக்க ஆரம்பித்த இவர்  தற்போது தென்னிந்திய படங்களில் ஆக்‌ஷன் ஹீரோயினாகவும் வலம் வருகிறார்.டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு 3 குழந்தைகளுக்கு தாயாக உள்ள சன்னி லியோன் சமீபத்தில் மீண்டும் ஒரு திருமணம் செய்துக் கொண்டார். 

இந்தநிலையில் சன்னி லியோனின் பெயரை குறிப்பிட்டு விரேந்திரா ஜோஷி என்பவர் ரூ.1,000 தொகையை பெறுவதற்கான அரசின் விண்ணப்பத்தில்  தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்டார்.

சத்தீஸ்கர் மாநில அரசு சார்பில் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வரும் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், பயன்பெரும் பயனாளிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அப்போதுதான்  சன்னி லியோனின் பெயரை குறிப்பிட்டு விரேந்திரா ஜோஷி என்பவர் ரூ.1,000 தொகையை பெறுவதற்கான அரசின் விண்ணப்பத்தில்  தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, உடனடியாக அந்த வங்கிக் கணக்கிற்கான உதவித் தொகை நிறுத்தப்பட்டதுடன், விரேந்திரா ஜோஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த மோசடி குறித்து அறிந்த சன்னிலியோன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 ''சத்தீஷ்கரில் எனது பெயர்/ அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தி மோசடி நடந்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் . பெண்களுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டத்தை தவறாக பயன்படுத்தி இருப்பது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறதுஎன்றும் . இதனை வன்மையாக கண்டிக்கிறேன்என்றும் . இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு எனது முழு ஆதரவைத் தருகிறேன்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fraud in government scheme Actress Sunny Leone


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->