மூவி ரசிகர்களுக்கு நற்செய்தி!!! மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் - இனி OTT யில்....!!!
Good news for movie fans Mr Housekeeping Now on OTT
பிரபல யூடியூபர் ஹரி பாஸ்கர் நடிகராகவும் ,பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா நாகியாகவும் இணைந்து நடித்த "மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்" திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பிக் பாஸ் ரயான் மற்றும் இயக்குநர் இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.மேலும் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 24-ம் தேதி வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் ஓடிடியில் வெளியாகியுள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ, டென்ட் கொட்டா, ஆஹா மற்றும் சிம்ப்ளி சவுத் தளங்களில் கண்டுகளிக்க முடியும்.
இந்தப் படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை குலோதுங்கவர்மன் , இசையை ஓஷோ வெங்கட் மேற்கொண்டுள்ளார்.
இந்தத் தகவல் லொஸ்லியா ஆர்மி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்குமென்று தெரிகிறது.
English Summary
Good news for movie fans Mr Housekeeping Now on OTT