இளையராஜாவாக களமிறங்கும் நடிகர் தனுஷ்: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய பொழுதுபோக்கு மற்றும் திரை வணிகர்களை மையமாகக் கொண்டு மெர்குரி, கனெக்ட் மீடியாவுடன் இணைந்து மெர்குரி மூவிஸ் என்ற பிரிவாக செயல்பட்டு வருகிறது. 

தென்னிந்தியாவில் புதிய வகை கதைகளின் வழியாக ஒரு புதிய உலகத்தை இந்த கூட்டணி ரசிகர்களுக்கு வழங்க உள்ளது. இந்த கூட்டணியில் முதல் திரைப்படமாக இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உள்ளது. 

இதில் பிரபல நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி 2025 ஆம் ஆண்டில் திரைப்படம் வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. 

உலகளாவிய பொழுதுபோக்கு திரைத்துறையில் 'மெர்குரி' மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்று. மெர்குரி எங்களுக்கு ஒரு அற்புதமான கூட்டணியாக உள்ளது. 

மேலும் அவர்களுடன் இணைந்து பல மெகா பட்ஜெட் படங்களை தயாரிப்பதிலும் மிகச்சிறந்த இசை மேதையின் வரலாற்று திரைப்படத்தை தயாரிப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என கனெக்ட் மீடியாவின் வருண் மாத்தூர் தெரிவித்துள்ளார். 

பல நாட்களுக்கு பிறகு இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ilaiyaraaja bio pic update release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->