சினிமாவில் ஹீரோயினாகும் காவியா அறிவுமணி..! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், ஹேமா, வெங்கட், குமரன், காவியா அறிவுமணி, சரவணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் நடித்து வந்த சித்ரா திடீரென கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிக முக்கிய கதாபாத்திரமாக முல்லை கதாபாத்திரம் இருந்தது.‌ சித்ரா இறந்த பின்னர் இந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகின்றார். இருப்பினும் முல்லை கதாபாத்திரம் பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்போது ரசிகர்களால் கருதப்படவில்லை.

இருப்பினும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு பின் காவியாஅறிவுமணிக்கு ரசிகர் கூட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்தவண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. 

இத்தகைய நிலையில் காவியா அறிவுமணி ரிபப்பரி திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kaavya arivumani in repappari movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->