அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பல திரை பிரபலங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது 'லியோ' படத்தின் வசூல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு அவர், 'திரைப்படத்தின் வசூலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முன்பை சொல்லி இருந்தேன். அதனை தயாரிப்பாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். 

திரையரங்கில் மக்களின் வரவேற்பை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாருக்கும் ரொம்ப பிடித்திருப்பதாக தெரிவித்தார்கள். இரண்டாம் பாதியில் தேய்வு இருப்பதாக கலவையான விமர்சனங்களும் இருந்தது. அதனையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lokesh Kanagaraj speech goes viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->