ஆர்யா நடிக்கும் ''மிஸ்டர் எக்ஸ்'' திரைப்படத்தின் மாஸ் அப்டேட்.! வைரலாகும் புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal



ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ''மிஸ்டர் எக்ஸ்''. பிரின்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகி வருகிறது. 

இந்த திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும் கௌதம் கார்த்திக் வில்லனாகவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் சரத்குமார், மஞ்சுவாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பு உகாண்டா, செர்பியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த திரைப்படத்திற்காக ஆர்யா கடுமையான உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாகவும் கடைசி நாள் படப்பிடிப்பில் பட குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MrX movie update release


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->