வாய்ப்பே இல்லை..எனது லட்சியம் அதுதான்'..நடிகை சன்னி லியோன் ஓபன் டாக்! - Seithipunal
Seithipunal


விரும்புவதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே இப்போதைக்கு என்னுடைய லட்சியம் என்று தனது சினிமா அனுபவத்தை நடிகை சன்னி லியோன் பகிர்ந்துள்ளார்.

 அமெரிக்காவில் ஆபாசப்பட நடிகையாக வலம் வந்தார் சன்னி லியோன். 18 வயதிலேயே ஆபாசபட நடிகையாக மாறிய இவரின் வீடியோக்கள் எல்லாம் ஆபாச இணையதளத்தில் மிகவும் பிரபலம். ஒரு கட்டத்தில் அது வேண்டாம் என முடிவெடுத்து மும்பையில் வந்து செட்டில் ஆன சன்னி லியோன் ஆபாச படத்தில் அவருடன் நடித்தவரையே திருமணமும் செய்து கொண்டார். 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.  ஒருபக்கம் பாலிவுட்டில் கிளுகிளுப்பான கதைகள் கொண்ட படத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் அவர் உருவாக்கியுள்ளார் .இன்ஸ்டாகிராமில் மட்டும் 45.1 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார். இவர் பகிரும் ஒவ்வொரு புகைப்படமும் பல லட்சம் வியூஸ்களை பெறும்.

 தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ,தற்போது தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய சன்னி லியோன், தனது சினிமா அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

அப்போது  அவர் கூறுகையில்,'தங்கள் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுமா? இல்லையா? என்ற கவலை ஒவ்வொரு நடிகருக்கும் உள்ளது என்றும்  எல்லோரும் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், சில நேரங்களில், நாம் விரும்பியபடி விஷயங்கள் நடக்காது என வெளிப்படையாக பேசினார்.

மேலும் தொடர்ந்து பேசிய சன்னி லியோன் நாம்  செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும்  ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஏன், ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கூட நிறைய மாறிக்கொண்டே இருக்கும் என கூறிய அவர் விரும்புவதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே இப்போதைக்கு என்னுடைய லட்சியம். தடைகளை உடைத்த கடின உழைப்பாளியாக என்னை மக்கள் நினைவுகூர விரும்புகிறேன்' என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Not a chance That s my goal Actress Sunny Leone Open Talk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->