பாக்ஸ் ஆபிஸ் சாதனை படங்கள் எல்லாம் நல்ல படங்கள் இல்லை! பாக்ஸ் ஆபிஸ் எல்லாம் பொய்! அதிரடியாக பேசிய இயக்குனர் எச்.வினோத்! - Seithipunal
Seithipunal


பாக்ஸ் ஆபிஸ் சாதனை படங்கள் எல்லாம் நல்ல படங்கள் இல்லை! பாக்ஸ் ஆபிஸ் எல்லாம் பொய் என இயக்குனர் எச்.வினோத் பேசியுள்ளார்!

சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சசிகுமார் நடித்துள்ள நந்தன் இசை வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான், இயக்குனர் எச். வினோத் உள்ளிட்ட பிரபலங்கள் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்!

இயக்குனர் எச்.வினோத் இசை வெளியீட்டு விழாவில் பேசியதாவது ,பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்‌ஷன் அள்ளும் படங்கள் எல்லாம் சிறந்த படங்கள் இல்லை! எது சிறந்த படம் என்றால், எந்தவொரு படம் மக்கள் மத்தியிலும் சமூகத்திலும் ஒரு சின்ன மாற்றத்தையாவது ஏற்படுத்துகிறதோ அதுதான் சிறந்த படம். அந்த வகையில் நந்தன் சிறந்த படமாக மாற்றத்தை ஏற்படுத்தும் என பேசினார்.

பாக்ஸ் ஆபிஸ் எல்லாம் பொய் தயாரிப்பாளர்களும் இப்போ பொய் சொல்ல ஆரம்பித்துட்டாங்க! என்ன கேட்ட ரசிகர்கள் படம் நல்ல இருக்கான்னுதான் பாக்கணுமே தவிர! படம் எவ்ளோ வசூல் பண்ணிச்சுனு பக்க தேவையில்ல! அது ப்ரோடீயூசரோட பிரச்னை என்று பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுக்கு எதிரான தனது கருத்தை வெளிப்படையாகவே இயக்குனர் எச். வினோத் பேசிகிட்டு வராரு!

இந்தநிலையில், விஜய்யின் 69வது படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்கயுள்ள நிலையில், பிரபல கன்னட திரைப்பட நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தான் தளபதி விஜய்யின் 69வது படத்தை தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புகள் உள்ளது!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Not all box office blockbusters are good films by h vinoth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->