தெறிக்கவிடும் அர்ஜுன் தாஸ் திரைப்படத்தின் ஃபாஸ்ட் லுக் போஸ்டர்!
Por movie update release
பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''போர்''. இரண்டு மொழி படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ரூக்ஸ் மீடியா, கெட் அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் பிரபு ஆண்டனி, பூஷன் குமார், மது அலெக்ஸாண்டர் ஆகியோர் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.
![](https://img.seithipunal.com/media/ppor-f7vu5.jpg)
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. வாழ்க்கையின் தார்மீக சிக்கல்கள் மற்றும் மனித இயல்புகளை இரண்டாக பிரிக்கும் இந்த போஸ்டர் விஷுவலாக இரண்டு போஸ்டர்கள் போல உள்ளது.
இதிலிருந்து பார்வையாளர்களை ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்க சொல்லும் விதமாக போஸ்டர் அமைந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.