பிரதீப் ரங்கநாதனின் புதிய படம்: வெளியான சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்க இருந்த நிலையில் சில பிரச்சனைகளால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது. 

தற்போது விக்னேஷ் சிவன் 'லவ் டுடே' திரைப்படம் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். 

காதல் கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் செவன் கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாகப் போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த திரைப்படத்திற்கு 'எல்ஐசி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி செட்டி, எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைக்க உள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pradeep Ranganathan New Movie Update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->