கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.! ரத்தினவேல் மனைவியின் ட்விட்.!! கொண்டாடும் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூன் 29-ம் தேதி மாமன்னன்.திரைப்படம் வெளியானது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 27ம் தேதி படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளை விட ஓடிடியில் படம் வெளியான பிறகு படத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. பலரும் மாமன்னன் படம்குறித்து புதிதாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக அந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்களை மையப்படுத்தி பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக மாமன்னன் படத்தில் உள்ள ரத்னவேல் கதாபாத்திரத்தை வைத்து சாதியத்தை பெருமைப்படுத்தும் பாடல்களை இணைத்து வீடியோக்களை ரீமேக்ஸ் செய்து வெளியிட்ட வருகிறார்கள்.

கடந்த ஒரு வார காலமாக சமூக வலைதளம் முழுவதும் ரத்தினவேல் கதாபாத்திரம் ஆக்கிரமித்து இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ரத்னவேலுவின் மனைவி ஜோதி கதாபாத்திரத்தில் நடித்த ரவீனாவை நெடிசன் கொண்டாடி வருகின்றனர்.

டப்பிங் ஆர்டிஸ்டான ரவீனா சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மாமன்னன் படத்தில் அவர் நடித்திருப்பதை இணையதள வாசிகள் கொண்டாடி வருகின்றனர். டப்பிங் ஆர்டிஸ்டான என்னை இந்த படத்தில் ஒரு டயலாக் கூட பேச வைக்கவில்லை என ஒரு விழா மேடையில் கூறியிருந்தார். 

ஆனால் டயலாக் பேசாத ரவீனாவை ரசிகர்கள் கொண்டாடி வருவது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்த பாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை! என் கனவில் இல்லை! ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள்! இதற்கு நன்றி மாரி செல்வராஜ் சார்!

கடந்த 3 நாட்களில், அனைத்து மீம்கள் மற்றும் எடிட்டிங்களை நேசிக்கிறேன். உரையாடல்கள் இல்லை மற்றும் திரையில் இடம் குறைவாக இருப்பது ஒரு பிரச்சனையாக இருக்காது என்று நான் நம்பினேன். இப்போது உங்கள் அன்பு நான் சொல்வது சரி என்று நிரூபித்துள்ளது ❤️! மாமன்னன் 🖤 அனைவருக்கும் நன்றி! அன்புடன்" என பதிவிட்டுள்ளார். அதனை ரவீனாவின் ரசிகர்கள் ரீட்விட் வெற்றி செய்து கொண்டாடி வருகின்றனர்



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raveena Tweet her happiness who acted as jothi charter in Mamannan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->