'தீவிரமான சண்டைக்கு தயாராகுங்கள்': வெளியான 'சலார்' படத்தின் அப்டேட்!
Salaar movie update release
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த திரைப்படத்தில் சுருதிஹாசன், பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் 2 நண்பர்களுக்கு இடையேயான படம் என இயக்குனர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி படத்தின் டிரைய்லரும் இருந்தது.
இந்த திரைப்படம் வருகின்ற 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரைய்லர் வெளியாகி சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/salaar-d4vas.jpg)
இந்நிலையில் படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த திரைப்படம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் 22 நொடிகள் ரன்னிங் டைம் ஆக உள்ளது.
இது தொடர்பாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் 'தீவிரமான சண்டைக்கு தயாராகுங்கள்' என குறிப்பிட்டுள்ளது.
English Summary
Salaar movie update release