நடிகர் தனுஷுக்கு இரண்டாவது திருமணமா? - முக்கிய அப்டேட் கொடுத்த தந்தை கஸ்தூரிராஜா.!
second marriage to actor dhanush
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
ஆனால், இந்தத் தம்பதியினர் கடந்த 2022ம் ஆண்டில் அவர்களது பிரிவை, தங்களது டிவிட்டர் பக்கங்களில் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கடந்த மாதத்தில், தங்களுக்கு விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அதனால் அவர்களது நிரந்தர பிரிவு உறுதியாகி விட்டது. இந்த நிலையில், நடிகர் தனுஷூக்கு 2வது திருமணம் செய்ய தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். மேலும், தனுஷிடம் இதுகுறித்து பேச்சு வார்த்தையும் நடத்தி வருகின்றனர். ஆனால் தனுஷ் இதற்கு பிடி கொடுக்காமல் நழுவி வருகிறார். இருப்பினும் விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வெளியாகி வருகிறது.
English Summary
second marriage to actor dhanush