பூஜையுடன் தொடங்கிய SK21 திரைப்படம்.. படக்குழு வெளியிட்ட முக்கிய வீடியோ.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். திரைப்படங்கள் அதிகமாக குடும்ப சென்டிமென்ட் அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். எனவே இவரது திரைப்படங்களுக்கு எப்பொழுதும் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். 

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் 21 வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பு உள்ளார்.

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற உள்ளதாகவும் சிவகார்த்திகேயனுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 21வது படத்திற்கான பூஜை என்று நடைபெற்றுள்ளது. இந்த பட பூஜையில் தயாரிப்பாளர் கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தற்போதைய இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைகளில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SK 21 movie Pooja video release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->