'எஸ்கே 21' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்! - Seithipunal
Seithipunal


மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாவீரன்'. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரூ. 90 கோடி வரை வசூலித்தது. 

தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் 21 வது திரைப்படத்தை கமலஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது. 

இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். மாவீரன் இசை வெளியீடு மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் சிவகார்த்திகேயன் நல்ல உடல் கட்டுடன் தலையில் குல்லா அணிந்திருப்பார். 

இதனால் 'எஸ்கே 21' திரைப்படத்தில் அவர் புதிய தோற்றத்தில் நடிப்பார் என ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக்கியது. 

ஆனால் அது உண்மையா அல்லது எடிட்டிங் செய்யப்பட்டதா என படக் குழு எந்த ஒரு அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் 'எஸ்கே 21' திரைப்படம் 2024 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SK 21 Movie Update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->