பெட்ஷிட் எல்லாம் எடுத்து உட்கார்ந்து கேட்பீங்களா!...உண்மையான குரு.. தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார் - இயக்குநர் செல்வராகவன்! - Seithipunal
Seithipunal


சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில், மகா விஷ்ணு என்பவர் பாவ புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு, முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என்று பேசிய இவரின் பேச்சு மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் இது தொடர்பாக இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில், யாரோ ஒருவர் எதையோ உளறி நான் ஆன்மிக குரு என்று பேசினால் உடனே நீங்கள் ஒப்புக்கொண்டு பெட்ஷிட் எல்லாம் எடுத்து கொண்டு நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு முன்பு போய் உட்கார்ந்து கேட்பீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

 

மேலும், உண்மையான குருவை நீங்கள் தேடிப் போக தேவையில்லை என்றும், அவரே உங்களை தேடி வருவார் என்று கூறியுள்ள அவர், உண்மையான குரு என்பவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார் என்றும், என்னங்க நீங்க அவ்வளவு காஞ்சிபோயா இருக்கீங்க தியானம் பண்றதற்கு என்று கூறியுள்ளார். 

 

இடையில் வேறு ஏதேனும் நினைப்பு எல்லாம் வந்தால் அதனை அடக்க வேண்டும் என்று நினைக்காதீங்க. அந்த நினைப்பு எல்லாம் தன்னாலே வரும். சிறிது நேரத்தில் தன்னாலே சென்றுவிடும். அப்புறம் மனசை நீங்க மீண்டும் கொண்டு வாங்க. புத்தர் வந்து இதை தான் சொல்கிறார். நீங்கள் நீச்சல் அடித்து கொண்டே இருந்தால் உங்களுக்கு நீச்சல் நன்றாக வந்துவிடும். இதற்கு மாற்று கருத்து ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். நான் கேட்டு கொள்கிறேன். ஆனால் மாற்றுக்கருத்து என்பது எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Take all the bed shit and sit and listen True guru will never reveal himself Director Selvaraghavan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->