'தளபதி 68' வெளியான அப்டேட்! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 68' என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, அரவிந்த், ஆகாஷ், சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தை கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்த படத்தின் பூஜை தொடர்பான வீடியோ சமீபத்தில் பட குழு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாக்கியுள்ளது. 

நவம்பர் 1ஆம் தேதி படகுழு பாங்காங் செல்ல உள்ளதாகவும் அங்கு பிரம்மாண்டமான காட்சி ஒன்றை படமாக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அதனை முடித்துவிட்டு தென் ஆப்பிரிக்காவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathi 86 update release 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->