உண்மையான பொங்கல் வின்னர் யார் ?துணிவா? வாரிசா?.. போட்டி போட்டு போஸ்டர் வெளியிடும் படக்குழு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிதுள்ள திரைப்படம் 'வாரிசு'. இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் நடித்துள்ளார்கள்.

அதேபோல், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் உலகம் முழுவதும் நள்ளிரவு 1 மணிக்கு அஜித்தின் துணிவு படம் வெளியானதை அடுத்து, விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கு வெளியானதனால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை 2 நாட்களில் துணிவு திரைப்படம் ரூ.38.6 கோடியும், வாரிசு திரைப்படம் ரூ.32 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித், விஜய் படங்களுக்காக ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது படக்குழுவினரும் போஸ்டர் மூலம் போட்டி போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வாரிசு மற்றும் துணிவு படக்குழு பொங்கல் வின்னர் என அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வாரிசு திரைப்படம் பொங்கல் வின்னர் என்றும் துணிவு திரைப்படம் உண்மையான பொங்கல் வின்னர் என்றும் போஸ்டர் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thunivu and Varisu Pongal Winner posters


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->