'துணிவு' படத்தின் வெளியீட்டு குறித்து முக்கிய அறிவிப்பு.. படக்குழு முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது.

இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இந்த படத்தின்  போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் துணிவு படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படம் திரையரங்குகளில் வெளியான பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thunivu movie overseas released by lyca production


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->