சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் விஜயகாந்த்.! வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


விஜயகாந்த் சினிமாவில் மீண்டும் நடிக்க போவதாக கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவர் ரசிகர்களால் கேப்டன் புரட்சிக்கலைஞர் என்று அன்போடு அழைக்கப்படுவார். இவர் நடிப்பு மட்டும் என்று இல்லாமல் அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். இவரது நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இவர் தனது ரசிகர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகின்றார். தேமுதிக என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

திரைப்படங்களில் நடிப்பதை விடுத்து அரசியல் நிகழ்ச்சிகளில் கூட முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்கிறார்.‌ தற்போது அவரது உடல்நலம் தேறியுள்ள நிலையில் அவர் சினிமாவில் மீண்டும் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மில்டன் இயக்கி விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakaanth again in cinema


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->