வீடு தீப்பிடித்தால், முதலில் கிம் ஜாங் உன்னின் புகைப்படத்தை மக்கள் காப்பாற்ற வேண்டும்; வட கொரியாவில் வினோதம்..! - Seithipunal
Seithipunal


வட கொரியாவில் வீடு தீப்பிடித்தால், முதலில் கிம் ஜாங் உன்னின் புகைப்படத்தை மக்கள் காப்பாற்ற வேண்டும் என்ற வினோத சட்டம் அந்நாட்டில் உள்ளது.

வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். குடும்ப சர்வாதிகாரம் மற்றும் குடிமக்கள் பின்பற்ற வேண்டிய அசாதாரண விதிகளுக்கு பெயர் பெற்ற நாடாகும். அங்குள்ள வினோத கட்டுப்பாடுகள் குறித்து @themillionairemagnets இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில்,வட கொரிய பெண் ஒருவர் பாட்காஸ்டில் பதட்டமாகப் பேசுவதைக் காட்டுகிறது. வர்ணனையாளர் ஜோ ரோகன், என்பவர் வட கொரியாவிலிருந்து தப்பியோடிய ஒரு பெண்ணுடன் உரையாடுகிறார்.

அதில், வடகொரியாவில் குடியிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னின் புகைப்படம் இருக்க வேண்டும் என்றும், அதை எப்போதும் கறைபடாமல் வைத்திருக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் விளக்குகிறார். தூசி இருக்கிறதா என்று சோதிக்க ஆய்வாளர்கள் பெரும்பாலும் இரவு முழுவதும் வீடுகளுக்குள் நுழைகிறார்கள் என்று கூறியிருப்பார்.

புகைப்படத்தில் ஏதேனும் தூசி காணப்பட்டால், அது விசுவாசமின்மையின் அடையாளமாகக் கருதப்படும் அத்துடன், அவர்கள் அந்த வீட்டில் உள்ளவர்களை கைது செய்யலாம்.

தண்டனை மரண தண்டனையாகவோ அல்லது குடும்பத்தின் மூன்று தலைமுறையினருக்கு சிறைத்தண்டனையாகவோ இருக்கலாம். ஒரு வீடு தீப்பிடித்தால், கிம் ஜாங்-உன்னின் படத்தைக் காப்பாற்றுவது ஒருவரின் சொந்த உயிரைக் காப்பாற்றுவதை விட முன்னுரிமை பெறுகிறதாக இருக்கிறது.

வைரலான இந்தப் பேட்டி, வட கொரியர்கள் எதிர்கொள்ளும் கற்பனை செய்ய முடியாத கஷ்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது மற்றுமன்றி , சமூக ஊடகங்களில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If a house catches fire people should first save Kim Jong un picture


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->