கற்பனைகளை காவியமாய் படைத்த.. உங்கள் அபிமான எழுத்தாளர்கள்.. கடந்து வந்த பாதை..!!
Famous Writers special
தமிழ் எழுத்தாளர்கள்...!!
சினிமாவில் படங்கள் பார்ப்பதற்கு தனித்தனி ரசிகர்கள் இருப்பது போல் கதைகள், கட்டுரைகள், நாவல், வரலாற்று புதினம், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் போன்றவைக்கும் ரசிகர் பட்டாளம் இருப்பார்கள்...
அதிலும் குறிப்பாக த்ரில் மற்றும் வியப்பூட்டும் சுவாரஸ்ய நாவல்கள் போன்றவற்றை படிப்பதற்கு தனியாக வாசகர்கள் எப்போதும் உண்டு. ஏனென்றால் இது போன்ற கதைகளை படிக்க யாருக்குத்தான் பிடிக்காது....
புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஓர் இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றது.
வரலாற்றுப் புதினம் அல்லது சரித்திர நாவல் என்பது, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலப் பகுதியில் நிகழ்ந்த நிகழ்வுகளையும், அக்கால மாந்தர்களையும் அடிப்படையாக வைத்து கற்பனையுடன் சேர்த்து எழுதப்படும் புதினம் ஆகும்.
சிறுகதை என்பது சுருக்கமான, கதை கூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். இது பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறும் புதினம் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.
தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல் :
அசோகமித்திரன், அம்பை, அ.முத்துலிங்கம், ஆண்டாள் பிரியதர்ஷினி, ஜோ டி குரூஸ், அரவிந்தன் நீலகண்டன், ஆதவன், இந்திரா சௌந்தர்ராஜன், இந்திரா பார்த்தசாரதி, எஸ். ராமகிருஷ்ணன், நா.சொக்கன், க.பூரணச்சந்திரன், சா.கந்தசாமி, கல்கி, கி.ராஜநாராயணன், கழனியூரன், சாரு நிவேதிதா, சிவசங்கரி, சுந்தர ராமசாமி, சுபா, சுஜாதா, சோ.தர்மன், தமிழ்மகன், தாமரைக்கண்ணன், தாமரை, தி.ஜானகிராமன், தேவன், நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், பாலகுமாரன், பெருமாள் முருகன், பா.ராகவன், ரமணி சந்திரன், ரா.கி.ரங்கராஜன், ராஜேஷ் குமார், லட்சுமி, லஷ்மி சரவணகுமார், ஜெயகாந்தன், ஜெயமோகன், பாவண்ணன், செந்தலை ந.கவுதமன்.