கனமழை - ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு.!
aavin company announce extra milk packets stock in avin shops for rain
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் படி நேற்று முன்தினம் முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
அந்த வகையில் இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர் தொடங்கி புதுக்கோட்டை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் பொதுமக்களுக்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்க ஆவின் பாலகம் தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:- ”சென்னையில் 8 இடங்களில் 24 மணிநேரமும் ஆவின் பாலகங்கள் இயங்க உள்ளது. அதாவது, மாதவரம் பால்பண்ணை பாலகம், பெசன்ட் நகர் பாலகம், வண்ணாந்துறை பாலகம், அம்பத்தூர் பால்பண்ணை கேட் பாலகம், அண்ணா நகர் அட்நஸ் டவர் பூங்கா பாலகம், சோழிங்கநல்லூர் பால்பண்ணை பாலகம், விருகம்பாக்கம் பாலகம், மயிலாப்பூர் சிபி ராமசாமி சாலை பாலகமும் உள்ளிட்ட எட்டு இடங்களில் 24 மணி நேரம் இயங்கும்.
சென்னையில் உள்ள மக்கள் அனைவருக்கும் பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவருக்கு அதிகபட்சமாக 4 பால் பாக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். தேவையான அளவு ஆவின்பால் பவுடர் மற்றும் யூஎச்டி பால் ஆவின் பாலகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட கூடுதலாக ஆவின் பால் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் தேவைப்படும் இடங்களில் தற்காலிக பால் விற்பனை நிலையங்கள் அமைத்து பால் மற்றும் பால் பவுடர் விநியோகம் செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
aavin company announce extra milk packets stock in avin shops for rain