சென்னை ஓ.எம்.ஆர்.ரில் ஒரு நாள் கராத்தே பயிற்சி வகுப்பு.. ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள்.!! - Seithipunal
Seithipunal


நேற்று சென்னை ஓ.எம்.ஆர் கழிப்பட்டூர் அமைந்துள்ள காய் லீ மார்ஷல் ஆர்ட்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா மற்றும் வாரியர்ஸ் டீம் இணைந்து, ஒரு நாள் கராத்தே பயிற்சி முகாம் நடத்தினர். இதில், இந்திய கராத்தே தலைமை பயிற்சியாளர் ஜிஹான் ஆனந்த் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். 

இந்த நிகழ்ச்சியில் காவல்துறை (ரைட்டர்) விஜயகுமார் மற்றும் கராத்தே கவிதா, காயத்ரி, ஞானவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இந்த ஒரு நாள் கராத்தே பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கராத்தே பயிற்சி மேற்கொண்டனர். 

தற்போதுள்ள காலகட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு தற்காப்பு கலை என்பது மிக அவசியமாக கருதப்படுகிறது. இந்த ஒருநாள் கராத்தே பயிற்சி வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பாக அமைந்ததாக, அவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிறப்பு விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியின் நிறைவில் மாணவ-மாணவிகளுக்கு கராத்தே பயிற்சிக்கான சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One day karate training class at OMR


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->