நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு! திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த 13-ந்தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை  திறக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 14-ந் தேதி முதல் வழக்கமான பூஜை மற்றும் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்து முடிந்தது.

பின்னர், திருவோணத்தை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி அன்று சிறப்பு பூஜை, வழிபாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர்களுக்கு ஓணம் விருந்து (சத்யா) அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஓணம் விருந்து 16 மற்றும் 17-ந் தேதியும் ஐயப்ப பக்தர்களுக்கு 3 நாட்கள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சகஸ்ர கலச பூஜை மற்றும் வழிபாடுகள் தந்திரி தலைமையில் 8-ம் நாளான நாளை (சனிக்கிழமை) சபரிமலை கோவிலில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டு பின்னர், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் அக் 16-ந் தேதி அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 

இதை தொடர்ந்து,  சபரிமலை ஐயப்பன் கோவிலில் 5 நாட்களாக அக்21-ந் தேதி வரை சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற உள்ளது. அதன்படி, தினசரி 50 ஆயிரம் பக்தர்கள் இந்த நாட்களில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarimala Ayyappan temple walk blocked tomorrow Travancore Devasthanam Announcement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->