TNPSC ஹால் டிக்கெட் வெளியீடு - எப்படி பதிவிறக்கம் செய்வது? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள 6,244 நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த நிலையில், இன்று குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, அதனை எப்படி டவுன்லோட் செய்வது என்பது குறித்து இங்குக் காண்போம்.

* தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான www.tnpsc.gov.in என்ற பக்கத்திற்குச் சென்று, அதில் ஏற்கனவே பதிவு செய்தோர் என்ற பட்டனை அழுத்தவும்.

* பின்னர் உங்கள் நிரந்தரப் பதிவு மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழையவும்.

* இதையடுத்து சுயவிவர பக்கத்தில், ஹால்டிக்கெட் என்ற இணைப்பைக் கிளிக் செய்து, டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCSE-IV) 2024 என்பதற்கு நேராக டவுன்லோட் ஹால் டிக்கெட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

* பின்னர் திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதிக் கொண்டு உள்நுழைந்து திரையில் தோன்றும் குரூப் 4 தேர்வு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC hall ticket download


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->