ரிலேடிவ்ஸ் எல்லாம் ப்ரண்ட்ஸ்... ப்ரண்ட்ஸ் எல்லாம் ரிலேடிஸ்வ்ஸ்!! இப்படி வாழ்ந்தால் 100 வயது நமக்கு கேரண்டி!
Healthy Life motivational speech
கருத்தரங்கம் ஒன்றில் இதய நோய் நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் பேசுகையில், நான் ஜப்பானில் 100 வயது வாழ்வது எப்படி என்பதை பற்றிய தலைப்பில் பேச ஆரம்பித்தவுடன் அரங்கில் இருந்த பலர் களைந்து செல்ல தொடங்கினர். நல்லதை தானே சொல்ல வந்தேன் பின்பு ஏன் செல்கிறார்கள் என்று விசாரதித்த பொது, அவர்கள் அனைவரும் 100 வயதை கடந்தவர்கள் பிறகு ஏன் உங்கள் பேச்சை கேட்க வேண்டும் என்று அங்கிருந்த நண்பர் கூறினார். ஜப்பானின் வாழ்க்கை முறை அப்படி. அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
எனக்கு இப்போது 80 வயதாகிறது. ஆனால் இதுவரை நான் எந்த மாத்திரைகளையும் எடுத்தோக்கொண்டதில்லை என்று கூறிய அவர். தொடர்ந்து எப்படி நீண்ட ஆயுளுடன் வாழ்வது எனபதை பற்றி பேசினார்.
எப்போதும் உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருங்கள். உங்களுடன் இருப்பவர்களையும் சந்தோசமாக வைத்துக்கொள்ளுங்கள். பிறருக்கு கொடுத்து பழகுங்கள். வயதானால் உங்களை தனிமை படுத்திக்கொள்ளாதிறீர்கள். உங்களுக்கு பிடித்த வேளைகளில் உற்சாகமாக ஈடுபடுங்கள்.
எளிமையான நேர்மையான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து உங்களுக்கு சந்தோசம் தரும் செயல்களை தொடர்ந்து செய்யுங்கள்.எப்போதும் பதட்டப்படாமல் அமைதியாக வாழ பழகுங்கள். உங்களின் உணவும் உடையும் எளிமையாக இருக்கட்டும்.
உறவுகளை நட்பாக்கிக்கொள்ளுங்கள், நண்பர்களை உறவாக்கிக்கொள்ளுங்கள். எப்போதும் நிமிர்ந்தே உட்கார பழகுங்கள். நல்ல விஷயங்களை கேட்டால் கைதட்டி உற்சாகப்படுத்துங்கள். அது உங்கள் உள்ளகை நரம்புகளை தூண்டிவிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இப்படியொரு வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தால் 100 வயதை தாண்டியும் நீங்கள் வாழலாம் என்றார் டாக்டர் சொக்கலிங்கம்.
English Summary
Healthy Life motivational speech