போலி கால்சென்டர் மூலம் மோசடி - கையும் களவுமாக பிடித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள குருகிராமில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் போலி கால் சென்டர் நடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி சைபர் கிரைம் பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள மூன்று வீடுகளில் கால் சென்டர் இயங்கி வருவது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு பணிபுரிந்தவர்களிடம் விசாரித்தபோது கால் சென்டர் நடத்துவதற்கான தொலைத்தொடர்புத் துறையின் உரிமம் அல்லது ஒப்பந்தம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் போலி கால் சென்டர் நடத்தியதாக 4 பெண்கள் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். 

இது குறித்து போலீஸ் உதவி கமிஷனர் பிரியன்ஷு திவான் தெரிவித்ததாவது:- "சந்தேக நபர்கள் ஹேக்கிங் அல்லது மால்வேர் காரணமாக தங்கள் கணினி அல்லது மடிக்கணினியில் உள்ள செயலிழப்பு குறித்து பயனரை எச்சரிக்கும் பல்வேறு விற்பனையாளர்கள் வழியாக குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு பாப்-அப் செய்திகளை அனுப்புவது வழக்கம். 

யாராவது பயனர் பாப்-அப் செய்தியை நம்பி, தொழில்நுட்ப உதவிக்காக அதில் உள்ள கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டால், இணையம் மூலம் குரல் அழைப்பு மையத்தில் இணைப்பு செய்யப்படும். இங்குள்ள சந்தேக நபர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களாக காட்டப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 peoples arrested for running duplicate call center in delhi gurugram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->