நடிகர் விஷாலுக்கு என்ன தான் ஆச்சு? வெளியான அதிகாரபூர்வ செய்தி! - Seithipunal
Seithipunal



சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்ற  'மத கஜ ராஜா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், படத்தில் நடித்த நடிகர் விஷால், சுந்தர் சி, விஜய் ஆண்டனி, குஷ்பு மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய விஷால் குரல் நடுக்கத்துடன், கையில் மைக்கை நடுக்கத்துடன் பிடித்துக் கொண்டே பேசியதும், பேச்சில் தடுமாற்றம் காணப்பட்டதும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீவிர காய்ச்சல் காரணமாக இப்படி இருக்கலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், பல்வேறு அவதூறு கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கமளித்துள்ளார்.  

அதில், "விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" எனும் தகவல் வெறும் வதந்தி மட்டுமே என அவர் தெரிவித்தார்.  

மேலும், "மருத்துவர்களின் ஆலோசனைப்படி விஷால் தற்போது வீட்டில் ஓய்வில் உள்ளார். காய்ச்சலால் ஏற்பட்ட உடல் வலி மற்றும் சோர்வின் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார்," என்றார்.  

"விஷால் விரைவில், ஒருசில நாட்களில் முழுமையாக குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்" என்றும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vishal Health Madagajaraja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->