பண்ருட்டி பணிமனையில் திடீர் தீ விபத்து - 4 பேருந்துகள் சேதம்.! - Seithipunal
Seithipunal


பண்ருட்டி பணிமனையில் திடீர் தீ விபத்து - 4 பேருந்துகள் சேதம்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் காலாவதி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 4 பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன. 

இந்தத் தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

இருப்பினும் இந்த விபத்தில், 4 பேருந்துகள் எரிந்து சேதமடைந்தன. மொத்தம் 15 காலாவதியான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை ஏலம் விடப்பட்டது. ஏலம் விடப்பட்ட பேருந்துகளை உடைத்து அகற்றும் பணி நடைபெற்று வந்தது. 

பகல் நேரங்களில் இந்த பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை பேருந்தில் திடீரென தீப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 govt bus damage for fire accident in pandruti


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->