4ம் கட்ட தேர்தல்: 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது; 1,717 பேர் போட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் இன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கான நான்காம் கட்ட மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று நடைபெறும் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாத உட்பட 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

இன்று நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலுடன் ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலத்திற்கான சட்டமன்ற பொது தேர்தலும் நடைபெறுகிறது. மக்களவைப் பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை ஆந்திராவில் 25, தெலுங்கானாவில் 17, மத்திய பிரதேசத்தில் 8, பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்கண்டில் 4, மகாராஷ்டிராவில் 11, ஒரிசாவில் 4, உத்திரபிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8 என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. 

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நான்காம் கட்ட வாக்கு பதிவு ஆனது மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இன்று நடைபெறும் தேர்தலில் மொத்தம் 17.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இன்று நடைபெறும் தேர்தலில் அகிலேஷ் யாதவ், யூசுப் பதான், ஓவைசி, ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா போன்ற நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4th phase Loksabha election polling started


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->