கேரளா || கனமழையால் நிலச்சரிவு.. மண்ணுள் புதைந்த வீடுகள்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலி..!
5 killed in Landslide in kerala
கனமழையால் நிலச்சரிவில் சிக்கி ஐவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது, குறிப்பாக மலையோர கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் நிலச்சரிவு ஆபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் இரவு நேர பயணங்களை தவிர்குமாறும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழைகாரணமாக குடையாத்தூர் என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அந்த பகுதியில் உள்ள வீடுகள் அணைத்தும் மண்ணில் புதைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
5 killed in Landslide in kerala