"மோக்கா புயல்" எதிரொலி.! மேற்கு வங்கத்தில் தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்..! - Seithipunal
Seithipunal


மோக்கா புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் 8 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் இன்று அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளை காக்ஸ் பஜார் (வங்காளதேசம்) மற்றும் கியாக்ப்யு (மியான்மர்) இடையே 14 ஆம் தேதி நண்பகல் வேளையில் சிட்வே (மியான்மர்) க்கு அருகில் மிகக் புயலாகக் கடக்கக்கூடும்.

இதனால் காற்றின் வேகம் 160 கிமீ வேகத்தில் இருந்து 175 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மேற்கு வங்கத்தில் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இது குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2வது பட்டாலியின் குர்மிந்தர் சிங், மேற்கு வங்கத்தின் திகாவில் தேசிய பேரிடர் மீட்புப் படை 8 குழுக்கள் மற்றும் 200 மீட்புப் பணியாளர்களை தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 Rescue Teams Deployed In west Bengal After Warning On Mocha storm


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->